முந்தைய போட்டியை விட சற்று மாறுபட்ட விக்கெட்டாக இருந்தது - பாட் கம்மின்ஸ்!
ஒரு நல்ல விக்கெட் என்று கூறுவேன். அதுவும் உலகின் இரண்டாவது நல்ல விக்கெட் இதுவாகும் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிரங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். அந்த அணியில் டிராவிஸ் ஹெட்47 ரன்களையும், அனிகெத் வர்மா 36 ரன்களையும், நிதீஷ் ரெட்டி 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் ஷர்தூல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Trending
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய நிக்கோலஸ் பூரன் 70 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 52 ரன்களையும் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அப்துல் சமத் 22 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய பாட் கம்மின்ஸ், “இது முந்தைய போட்டியை விட சற்று மாறுபட்ட விக்கெட்டாக இருந்தது. அதனால் நாங்கள் இங்கு விரைவாக ரன்களைச் சேர்க்க வேண்டி இருந்தது. அவர்கள் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருப்பினும் இதனை ஒரு நல்ல விக்கெட் என்று கூறுவேன். அதுவும் உலகின் இரண்டாவது நல்ல விக்கெட் இதுவாகும். அவர்கள் இப்போட்டியில் மிகவும் நன்றாக பந்துவீசினர். மேலும் அவர்கள் சிறந்த திட்டத்தையும் கொண்டிருந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் 190 ரன்களை எடுத்தது நல்ல முயற்சி என்று நினைக்கிறேன். இன்னிங்ஸ் முழுவதும் பேட்டிங் செய்ய எப்போதும் ஒரு நபர் தேவை, இஷான் கிஷன் மற்ற நாளில் செய்தது போல, ஆனால் அவர்கள் மிகவும் நன்றாக பந்து வீசினர், எங்களுக்கும் அவர்கள் வாய்ப்புகளை கொடுக்க வில்லை. இது ஒரு நீண்ட தொடராகும், எங்களுக்கு மிக விரைவாக ஒரு வாய்ப்பு கிடைக்கும், எனவே நாங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now