IPL: Ahmedabad & Lucknow Franchise Receive Deadline To Submit Draft Picks (Image Source: Google)
இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் துவங்க உள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளும் இணைந்து விளையாட இருக்கின்றன.
ஏற்கனவே 8 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்த வேளையில் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் 3 வீரர்களை ஏலத்தில் முன்பாக தேர்வு செய்து கொள்ளலாம் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி இவ்விரு அணிகளும் 3 வீரர்களை தேர்வு செய்ய 33 கோடி ரூபாய் வரை செலவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் தேர்வு செய்ய இருக்கும் முதல் வீரருக்கு 15 கோடி ரூபாயும், இரண்டாவது வீரருக்கு 11 கோடி ரூபாயும், மூன்றாவது வீரருக்கு 7 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் செலவு செய்து கொள்ளலாம்.