
IPL Auction 2022: Auction Stops Midway Due To Unfortunate Circumstances (Image Source: Google)
ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் இன்றும் நாளையும் (பிப்ரவரி 12, 13) நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸ் என புதிதாக இரு அணிகள் இணைந்திருக்கும் நிலையில், 10 அணிகள் ஏலத்தில் இருக்கின்றன. அவை ஏலத்தில் எடுப்பதற்காக மொத்தமாக 590 வீரா்கள் களம் காண்கின்றனா்.
ஐபிஎல் ஏல நடத்துநராக எட்மியட்ஸ் பணியாற்றுகிறார். ஐபிஎல் போட்டியின் ஆரம்பம் முதல் ரிச்சர்ட் மேட்லி, ஏல நடத்துநராகப் பணியாற்றினார். 2018 முதல் எட்மியட்ஸ் அப்பணியைத் தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் ஏலம் நடைபெற்றபோது ஏல நடத்துநர் ஹக் எட்மீட்ஸ் திடீரென மயங்கி விழுந்தார். வனிந்து ஹசரங்காவை அணிகள் தேர்வு செய்ய மும்முரமாக இருந்தபோது மேடையிலிருந்து எட்மியட்ஸ் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.