
IPL Auction: Teams can retain 4 players, new franchises can pick 3 from rest of pool (Image Source: Google)
ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பான விவாதத்தை அணிகளுடன் நடத்திய பிசிசிஐ, சில முக்கிய முடிவுகளை அணிகளிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் பழைய 8 அணிகளும் 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கு ரூ. 90 கோடி ஒதுக்கப்படுகிறது.