
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. மேலும் தொடரின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பினான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியதுடன், தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. மேஎலும் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.
மேலும் பொதுத்தேர்தல் காரணாமாக நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள போட்டி அட்டவணை கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரின் இறுதிப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL final scheduled in Chennai, Narendra Modi Stadium to hold two knockout games! #IPL2024 #KKRvSRH #Chennai #Ahmedabad pic.twitter.com/NZGA4ZC1Sv
— CRICKETNMORE (@cricketnmore) March 23, 2024