
IPL: If I don't get picked in this auction, then don't know when I will, says McDermott (Image Source: Google)
2021-22 பிக் பாஷ் லீக் டி20 தொடரில் 13 ஆட்டங்களில் 29 சிக்ஸர்களுடன் 577 ரன்கள் எடுத்து போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வானார் ஹோபர்ட் அணியைச் சேர்ந்த 27 வயது பென் மெக்டர்மாட். அவரது ஸ்டிரைக் ரேட் - 153.86. ஆஸ்திரேலிய அணிக்காக இதற்கு முன்பு 2 ஒருநாள், 17 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி பங்கேற்கிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி பென் மெக்டர்மாட் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்துக்குத் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார் பென் மெக்டர்மாட்.