
IPL: KL Rahul is a phenomenal white ball batter, says Lucknow's mentor Gautam Gambhir (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், கேஎல் ராகுல் தலைமைத் தாங்கிய இந்திய ஒருநாள் அணி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்து தென் ஆப்பிரிக்காவிடம் ஒயிட்வாஷ் ஆனது.
இந்நிலையில் கேப்டன்சி குறித்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன. இதற்கிடையில் கேஎல் ராகுல் மிகச்சிறந்த வீரர் மற்றும் சிறந்த கேப்டனும் கூட என இந்திய அணியின் முன்னாள் வீரரும், லக்னோ ஐபிஎல் அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கே.எல்.ராகுலைப் பற்றி விமர்சிக்க இது ஒரு விஷயமே இல்லை. அவர் ஒரு பேட்டர் மட்டுமல்ல, வெளிப்படையாக ஒரு தலைவரும் கூட.