
IPL Mega Auction - A Complete Overview Of 2 Days Of Intense Drama (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் கடந்த இரண்டு நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று முடிவடைந்தது. இந்த முறை மொத்தமாக 204 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் 67 அயல்நாட்டு வீரர்கள் ஆகும். மொத்தமாக ரூ. 551.70 கோடிக்கு ஏலம் போயுள்ளது.
இதில் மும்பை, சென்னை, பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் மட்டும் தலா 25 வீரர்களை வைத்துள்ளன.
- சென்னை அணி - மொத்தம் 25 வீரர்கள், 8 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ. 2.95 கோடி
- டெல்லி கேப்பிடல்ஸ் - 24 வீரர்கள், 7 அயல்நாட்டு வீரர்கள்,மீதமுள்ள தொகை ரூ. 10 லட்சம்
- கொல்கத்தா அணி - 25 வீரர்கள், 8 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ.45 லட்சம்
- மும்பை இந்தியன்ஸ் - 25 வீரர்கள், 8 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ. 10 லட்சம்
- பஞ்சாப் கிங்ஸ் - 25 வீரர்கள், 7 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ. 3.45 கோடி
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 24 வீரர்கள், 8 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ.95 லட்சம்
- பெங்களூரு அணி - 22 வீரர்கள், 8 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ. 1.55 கோடி
- ஐதராபாத் அணி - 23 வீரர்கள், 8 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ. 10 லட்சம்
- லக்னோ அணி - 21 வீரர்கள், 7 அயல்நாட்டு வீரர்கள், மீத தொகை இல்லை
- குஜராத் அணி - 23 வீரர்கள், 8 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ. 15 லட்சம்
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெயிக்வாட், ஜடேஜா, டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ராகுல் சஹார், கிறிஸ் ஜோர்டன், ஜகதீசன், ஆடம் மில்னே, மிட்செல், சாண்ட்னர், டுவைன் ப்ரிடோரியஸ், டெவோன் கான்வே, பகத் வர்மா, ஹரி, நிஷாந்த், பிரஷாந்த், முகேஷ் சௌத்ரி, அன்ஷு சேனாதிபதி, சிமார்ஜீத், ராஜ்வர்தன், தீக்ஷனா, ஷிவம் தூபே, துஷார் தேஷ்பாண்டே, கே.எம். ஆசிஃப்.