
IPL: MS Dhoni begins practice with CSK teammates (Image Source: Google)
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணையை நேற்று பிசிசிஐ வெளியிட்டது.
அதன்படி வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்கும், இந்த தொடர் மே 29ஆம் தேதியன்று முடிவடையும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி வரும் 26ஆம் தேதி மாலை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த இரு அணிகளும் தான் கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் மோதியிருந்தன.