
ராஜஸ்தான் கிரிக்கெட் பிரியர்களின் நீண்ட நாள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் (எஸ்எம்எஸ்) மைதானம் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை நடத்துகிறது. ஐபிஎல் அட்டவணையின்படி, ராஜஸ்தான் ராயல்ஸின் ஐந்து போட்டிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் இரண்டு ஹோம் மேட்ச்களை கவுகாத்தியில் விளையாடியது. அதன் பிறகு எஞ்சிய ஆட்டங்களை ஜெய்ப்பூரில் விளையாடும். போட்டிகள் எஸ்எம்எஸ் மைதானத்தில் ஏப்ரல் 19, ஏப்ரல் 27, மே 5, மே 7 மற்றும் மே 14 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஜெய்ப்பூரில் நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் ஆட்டம் லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணிக்கு இடையே நாளையும், (ஏப்ரல் 19), கடைசி போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஏதிராக மே 14ஆம் தேதியும் நடக்கிறது.
அதேசமயம் நாளை நடைபெறும் போட்டியில் சுமார் 23,000 டிக்கெட்டுகள் விற்றுதீர்ந்துள்ளதாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் நாளை போட்டியில் ராஜஸ்தான் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.