
IPL: Rohit Sharma becomes first batter to score over 1000 runs against one franchise (Image Source: Google)
அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்யும் மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் குயிண்டன் டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னைக்கு எதிரான ஆட்டத்தின்போது ஓய்வில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா, இன்றைய ஆட்டத்தில் கலக்கி வருகிறார்.
இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா 18 ரன்களை கடந்தபோது ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்தினார். ஒரே ஒரு அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை தான் அது. அவரது சாதனையை மும்பை அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021