ஐபிஎல் 2024: டிரேடிங் முறையில் வீரர்களை மற்றிய ஆர்சிபி - எஸ்ஆர்எச்!
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் ஷபாஸ் அஹ்மதை ஹைதராபாத் அணிக்காகவும், ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் மயங்க் டாகர் ஆர்சிபி அணிக்காகவும் டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கால்பந்து விளையாட்டை போல் ஐபிஎல் டிரேடிங் முறையும் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் டிரேவிங் முறையில் ரொமாரியோ ஷெப்பர்ட், ஆவேஷ் கான், தேவ்தத் படிக்கல் உள்ளிட்டோர் மாற்று அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தொடர்ந்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரேடிங் முறையில் மாற்றி ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் ஐபிஎல் ஏலத்திற்கு வரும் போது, அவர்களின் ஏலத்தொகை பன்மடங்கு உயரும். இதனால் டிரேடிங்கில் வாங்கினால், எளிதாக வீரர்களை கைப்பற்ற முடியும். அதுமட்டுமல்லாமல் பெரிய தொகை கொடுக்கவும் தேவையில்லை என்று பார்க்கப்படுகிறது. இதனால் வழக்கத்திற்கு அதிகமாக வீரர்களுக்கான டிரேடிங் முறை அதிகரித்துள்ளது.
Trending
இதுவரை லக்னோ, மும்பை, ராஜஸ்தான் அணிகள் டிரேடிங்கில் வீரர்களை வாங்கிய நிலையில், தொடர்ந்து குஜராத், ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் அணிகளும் டிரேடிங்கில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் ஷாபாஸ் அஹ்மத் டிரேடிங் முறையில் ஹைதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் மயங்க் டாகர் ஆர்சிபி அணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது 27 வயதாகும் டெல்லியை சேர்ந்த வீரரான மயங்க் டாகரை கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹைதராபாத் அணி ரூ.1.8 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. அதேபோல் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ஆர்சிபி அணி தரப்பில் பெங்காலை சேர்ந்த ஷாபாஸ் அஹ்மத்தை ரூ.2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. கடந்த சீசனில் ஷாபாஸ் அஹ்மத் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் இரு அணிகளும் டிரேடிங் முறையில் வீரர்களை மாற்றி கொண்டுள்ளனர். ஹைதராபாத் அணியை பொறுத்தவரை புதிய பயிற்சியாளராக டேனியல் விட்டோரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மினி ஏலம் வருவதால் அவரின் திட்டம் என்ன என்பதை பொறுத்தே ஹைதராபாத் அணி நிர்வாகம் வீரர்களை விடுவிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now