ஐபிஎல் 2023: அணிகளுக்கு அதிரடி உத்தரவை பிறபித்தது பிசிசிஐ!
ஐபிஎல் 16ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கவுள்ள நிலையில், அடுத்த சீசனுக்கு அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இதில் 15ஆவது சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்ற 2 அணிகள் புதிதாக களமிறங்கியதால் கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடத்தப்பட்டது.
அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது. அடுத்த ஐபிஎல் சீசன், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று தகவல்வகள் வெளியாகி வருகின்றன. அடுத்த சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 3வது வாரத்தில் பெங்களூருவில் நடக்கவுள்ளது. ஏலத்திற்கு முன்பாக ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியலை தயார் செய்யவேண்டும்.
Trending
இந்நிலையில், ஐபிஎல் அணிகள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. டி20 உலக கோப்பை தொடர் நவம்பர் 13 முடியும் நிலையில், இந்த டி20 உலக கோப்பையில் வீரர்கள் ஆடுவதை பொறுத்து அணிகள் தங்களுக்கு தேவையான மற்றும் தேவையில்லாத வீரர்களை முடிவு செய்யும். அடுத்த சீசனுக்கான ஏலத்திற்கு ஒவ்வொரு அணிக்கும் முன்பை விட கூடுதல் தொகை அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.
Win Big, Make Your Cricket Tales Now