ஐபிஎல் திருவிழா 2021: அறிமுக கேப்டன்களுன் களமிறங்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்; வெற்றி பெறுவது யார்?
நடப்பு ஐபிஎல் சீசனின் ஏழாவது லீக் போட்டி இன்று மும்பை வான்கேடே மைதானத்த
நடப்பு ஐபிஎல் சீசனின் ஏழாவது லீக் போட்டி இன்று மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனின் முதல் போட்டியில் டெல்லி அணி சென்னையை வீழ்த்தி இருந்தது. அதேபோல் ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியிடம் கடைசி பந்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Trending
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் தலைமையில் களம் காணும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சோதனை மேல் சோதனையாக அணியின் முன்னணி வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் விலகியுள்ளனர். மேலும் கடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் இறுதிவரை போராடியும் அணியால் வெற்றியைப் பெற முடியவில்லை.
இதனால் இன்றைய போட்டிக்கான அணியில் சில மாற்றங்களை ராஜஸ்தான் அணி செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது. குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளதால், அவரது இடத்திற்கு டேவிட் மில்லர் அல்லது லியம் லிவிங்ஸ்டன் ஆகியோரைத் தேர்வுசெய்ய அதிக வாய்ப்புள்ளது. அதேசமயம் பந்துவீச்சில் சக்ரியா அபாரமாக செயல்பட்டு வருவதால், இன்றைய போட்டியிலும் அவரது பந்துவீச்சு அணிக்கு பெரும் பலனை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் கிறிஸ் மோரிஸ், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோரும் பந்துவீச்சில் அசத்தும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என்பதில் சந்தேகமில்லை.
டெல்லி கேப்பிட்டல்ஸ்
ரிஷப் பந்த் தலைமையில் நடப்பு சீசனை களம் கண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அதிலும் அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், பிரித்வி ஷா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அணியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து டெல்லி அணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை,
ஆனால் கரோனா நெறிமுறை காரணமாக வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா இன்றைய போட்டியில் இடம்பெறமாட்டார். ஆதேபோல் மற்றோரு வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் டாம் கரன், கிறிஸ் வோக்ஸ், ஆவேஷ் கான் ஆகியோரை மட்டுமே டெல்லி அணி நம்பியுள்ளது. சுழற்பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோர் தேவைப்படும் நேரத்தில் அணிக்கு விக்கெட்டுகளை கைப்பற்றுவதால், அவர்கள் எதிரணிக்கும் நிச்சயம் தலைவலியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
நேருக்கு நேர்
ஐபிஎல் அரங்கில் இந்த இரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் இரு அணிகளும் தலா 11 முறை வெற்றி பெற்றுள்ளன.
இந்த போட்டியில் இரு அணியின் கேப்டன்களான ரிஷப் பந்த்மற்றும் சஞ்சு சாம்சன் பெரிய இன்னிங்ஸ் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடுகளத்தை பொறுத்தவரை பேட்டிங் செய்ய சாதகமானது என்பதால் இன்றைய போட்டியில் ரன் குவிப்புக்கு பஞ்சமிருக்காது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிரித்வி ஷா, அஜிங்கியா ரஹானே,ரிஷப் பந்த், சிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், டாம் கரன், ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், மனன் வோரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் திவேத்தியா, ஷிவம் தூபே, ஸ்ரேயாஸ் கோபால், கிறிஸ் மோரிஸ், முஸ்தபிசுர் ரஹ்மான், சேட்டன் சக்கரியா.
Win Big, Make Your Cricket Tales Now