
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி, குஜராத் அணியை தனது சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாசை வென்று முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் பட்லர் விக்கட்டை இழந்தாலும் நன்றாகவே துவங்கியது.
ஆனால் பவர் பிளேவில் ரஷித் கான் வீசிய கடைசி ஓவரில் ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் ஆனதும், அதற்கடுத்து மிகச் சிறப்பான டச்சில் தெரிந்த கேப்டன் சஞ்சு சாம்சன் தேவையில்லாத ஷாட் விளையாடி விக்கட்டை கொடுத்ததும் பெரிய சரிவாக ராஜஸ்தான் அணிக்கு அமைந்தது. இதனால் 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரண்களுக்கு சுருண்டது ராஜஸ்தான்.
ஆனால் குஜராத் அணி கில் விக்கட்டை மட்டும் இழந்து 13.5 ஓவரில் இலக்கை எட்டி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குஜராத் அணிக்கு பிளே ஆப்ஸ் வாய்ப்பை எந்த அளவுக்கு அதிகரித்து இருக்கிறதோ, அதே அளவுக்கு ராஜஸ்தான் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பை குறைத்து இருக்கிறது.