
IRE vs IND 2nd T20I: umran malik changed his tactics during ireland series (Image Source: Google)
அயர்லாந்து சென்ற இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் ஆகியோர் மிரட்டலாக விளையாடி, பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்த பார்ட்னர்ஷிப் 150+ ரன்களை கடந்து நீடித்தது. இறுதியில் ஹூடா 104 (57) சதமடித்தார். சாம்சனும் 42 பந்துகளில் 77 ரன்களை குவித்தார்.
மற்றவர்களில் இஷான் கிஷன் 3 (5), சூர்யகுமார் யாதவ் 15 (5), ஹார்திக் பாண்டியா 13 (9) போன்றவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 225/7 ரன்களை குவித்தது.