
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பின், இந்திய அணி அயர்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், 2ஆவது டி20 போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதியும் நடக்கவுள்ளது.
இந்த டி20 தொடருக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடி வரும் இஷான் கிஷனுக்கு அயர்லாந்து டி20 தொடரில் ஓய்வு வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இவர்கள் இருவருமே உலகக்கோப்பைத் தொடருக்கான பேக் அப் விக்கெட் கீப்பருக்கான போட்டியில் இருக்கிறார்கள். ஒருநாள் போட்டிகளில் கேஎல் ராகுல் மெயின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இதனால் ஆசியக் கோப்பைத் தொடருக்கு கேஎல் ராகுல் தயாராகி வருவதால், உலகக்கோப்பைத் தொடருக்கு ஒரேயொரு பேக் அப் விக்கெட் கீப்பரே போதுமானது.