
Ireland vs Pakistan Dream11 Prediction 2nd T20I: பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளின் முடிவில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒருவெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமனில் வைத்துள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் எந்த அணி வெற்றிபெறுகிறதோ அந்த அணி தொடரையும் வெல்லும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளன. இதனால் இரு அணிகளும் இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் விளையாடவுள்ளன.
IRE vs PAK : போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - அயர்லாந்து vs பாகிஸ்தான்
- இடம் - க்ளோன்டார்ஃப் கிரிக்கெட் மைதானம், டப்ளின்
- நேரம் - இரவு 7.30 மணி
IRE vs PAK: Pitch Report
டப்ளினில் உள்ள இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பந்துவீச்சாளர்களுக்கு தேவையான வேகம் மற்றும் ஸ்விங்கும் இருக்கும் என்பதால் அது பேட்டர்களுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
IRE vs PAK: Head-to-Head
- மோதிய போட்டிகள் - 03
- அயர்லாந்து - 02
- பாகிஸ்தான் - 01