
Ireland vs South Africa 1st ODI, Dream11 Prediction: அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன.
இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள்தொடரை இழந்துள்ள கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேற்கொண்டு அய்ர்லாந்து அணியும் சமீபத்தில் சிறப்பாக விளையாடி வருவதன் காரணமாக, இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
IRE vs SA 1st ODI: Match Details
- மோதும் அணிகள் - அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
- நேரம் - அக்டோபர் 02, மாலை 5 மணி (இந்திய நேரப்படி)
IRE vs SA 1st ODI: Live Streaming Details
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை. இருப்பினும் இத்தொடரை ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம்.
IRE vs SA 1st ODI Head-to-Head In T20Is
- மோதிய போட்டிகள் - 08
- தென் ஆப்பிரிக்கா - 06
- அயர்லாந்து - 01
- முடிவில்லை - 01