
IRE vs WI, 1st T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் படுமோசமான தோல்வியைத் தழுவி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதில் அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்த நிலையில், தற்சமயம் இந்த டி20 தொடரை எந்த அணி கைப்பற்றும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் நிச்சயம் இத்தொடரிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என கணிக்கப்படுகிறது.
IRE vs WI: Match Details
- மோதும் அணிகள் - அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானம், பெல்ஃபாஸ்ட்
- நேரம்- ஜூன் 12, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)
IRE vs WI: Live Streaming Details
அயர்லந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.