
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
IRE vs WI, 1st T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற இருந்த முதல் டி20 போட்டியானது மழை காரணமாக டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்பட்டது.
இதையடுத்து அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி கைவிடப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய போட்டிகளில் வெற்றிபெறும் அணியே தொடரை வெல்லும் என்பதால், இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
IRE vs WI: Match Details
- மோதும் அணிகள் - அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானம், பெல்ஃபாஸ்ட்
- நேரம்- ஜூன் 14, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)
IRE vs WI: Live Streaming Details
அயர்லந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.