
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில் அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று டப்ளினில் உள்ள கேஷ்டல் அவென்யூவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் ஒரு ரன்னிலும், எவின் லூயிஸ் 14 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் கேசி கார்டி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதொடர்ந்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாய் ஹோப் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 75 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அமிர் ஜங்கூவும் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.