 
                                                    
                                                        அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)                                                    
                                                IRE vs WI, 3rd T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற இருந்த முதலிரண்டு டி20 போட்டிகளும் மழை காரணமாக டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்பட்டது.
இதையடுத்து அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற இருந்த முதலிரண்டு போட்டிகளும் மழையால் கைவிடப்பட்ட நிலையில் இப்போட்டியாவது நடைபெறுமே என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. அப்படி நடைபெற்றாலும் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன.
IRE vs WI: Match Details
- மோதும் அணிகள் - அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானம், பெல்ஃபாஸ்ட்
- நேரம்- ஜூன் 15, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        