
Ireland vs West Indies, 3rd T20I: அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் எவின் லூயிஸ் 91 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற இருந்த முதலிரண்டு டி20 போட்டிகளும் மழை காரணமாக டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் எவில் லூயிஸ் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மிரட்டினர். பின் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 51 ரன்களை எடுத்திருந்த ஷாய் ஹோப் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரோவ்மன் பாவெலும் 2 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தர்.