IRE vs ZIM, 1st ODI: அயர்லாந்து பந்துவீச்சு; கடின இலக்கை நிர்ணயிக்குமா ஜிம்பாப்வே?
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ர அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் பெல்ஃபெஸ்டில் இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி, முதலில் ஜிம்பாப்வேவை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
ஏற்கெனவே டி20 தொடரை இழந்துள்ள ஜிம்பாப்வே அணி, ஒருநாள் தொடரிலாவது வெற்றிபெறும் என்ற நோக்குடன் இன்றைய போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட், ஆண்ட்ரூ பால்பர்னி (கே), ஹாரி டெக்டர், ஜார்ஜ் டாக்ரெல், சிமி சிங், லோர்கன் டக்கர், ஆண்டி மெக்பிரைன், மார்க் அதிர், கிரேக் யங், ஜோஷ்வா லிட்டில்
Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
ஜிம்பாப்வே: பிரெண்டன் டெய்லர், ரெஜிஸ் சகப்வா, கிரேக் எர்வின் (கே), டியோன் மியர்ஸ், சீன் வில்லியம்ஸ், வெஸ்லி மாதெவெரே, சிக்கந்தர் ரஸா, லூக் ஜோங்வே, வெலிங்டன் மசகட்ஸா, பிளஸிங் முசரபாணி, ரிச்சர்ட் ந்கராவா.
Win Big, Make Your Cricket Tales Now