IRE vs ZIM: ஜிம்பாப்வேவிற்கு 175 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி டப்லினில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - கெவின் ஓ பிரையன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கெவின் ஓ பிரையன் 47 ரன்களில் ஆட்டமிழக்க, பால் ஸ்டிர்லிங் 39 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
Trending
அதன்பின் களமிறங்கிய கேப்டன் பால்பிர்னி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
ஜிம்பாப்வே அணி தரப்பில் வெல்லிங்டன் மஸகட்சா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து கடின இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்யவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now