
IRE vs ZIM: Zimbabwe end up with a total of 124/4 (Image Source: Google)
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான டினாஷே கமுன்ஹுகம்வே, மதேவரே, சகாப்வா ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் எர்வின் - டியான் மியர்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயர்ச்சித்தது. இதில் மியர்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த கிரேக் எர்வின் அரைசதம் கடந்து அசத்தினார்.