உலகக்கோப்பை தகுதிச்சுற்று: 15 பேர் அடங்கிய அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிக்கான 15 பேர் அடங்கிய அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
அதன்படி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் ஜூன் 18இல் தொடங்கி ஜூலை 9ஆஆம் தேதி நிறைவடைகின்றன. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் ‘ஏ’, ‘பி’ என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் இதர அணிகளுடன் மோதும்.
Trending
அந்தவகையில் அயர்லாந்து அணி குரூப் பி பிரிவில் இடம்பித்துள்ளது. மேலும் குரூப் பி பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்
ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில் இந்த தகுதிச்சுற்று போட்டியில் விளையாடும் 15 பேர் அடங்கிய அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஆண்ட்ரூ பால்பிர்னி தலைமையிலான இந்த அணியில் பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் காம்பெர், மார்க் அதிர், ஜோஷுவா லிட்டில் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
அயர்லாந்து அணி: ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), மார்க் அதிர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், கிரஹாம் ஹியூம், ஜோஷ் லிட்டில், ஆண்டி மெக்பிரைன், பேரி மெக்கார்த்தி, பிஜே மூர், பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.
Win Big, Make Your Cricket Tales Now