
Ireland Beat USA By 9 Runs To Level T20I Series 1-1 (Image Source: Google)
அமெரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் லோர்கன் டக்கர் அரைசதம் விளாசி அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சரியாக சோபிக்காததால் 18.5 ஓவர்களிலேயே அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக லோர்கன் டக்கர் 84 ரன்களைச் சேர்த்தார். அமெரிக்க அணி தரப்பில் நெட்ரவால்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.