
Ireland cricketer Gaby Lewis reminds ICC after luggage gets stalled for two weeks (Image Source: Google)
சமீபத்தில் ஓமன் நாட்டில் நடந்த கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டி முடிவடைந்தும் அவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர். ஆனால் 2 வாரம் ஆகியும் இன்னும் அவர்களது பொருள்கள் ஓமன் நாட்டிலேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அயர்லாந்து கிரிக்கெட் வீராங்கனை கேபி லூயிஸ் ஐசிசி மீது புகார் அளித்துள்ளார். அதில், ‘எங்களது பொருள்கள் குறித்து ஏதாவது தகவல் இருக்கிறதா ஐசிசி? 13 நாட்களை கடந்து அவை இன்னும் ஓமன் நாட்டிலேயே இருக்கின்றன. இதில் மோசமான விஷயம் என்னவென்றால் எனது கல்லூரி நோட்ஸ்களும் அதில்தான் இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.