
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஸத்ரான் 53 ரன்களையும், கரிம் ஜானத் 41 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க வில்லை. இதன் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 155 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. அயர்லாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மார்க் அதிர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அயர்லாந்து அணியிலும் கேப்டன் பால்பிர்னி 2 ரன்களிலும், மூர் 12 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய கர்டிஸ் காம்பேர் 49 ரன்களிலும், ஹாரி டெக்டர் 32 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, பால் ஸ்டிர்லிங் அரைசதம் கடந்து அணியை முன்னிலைப் படுத்தினார்.