
ஐபிஎல் 15ஆவது சீசன் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையும் வெளியாகிவிட்டன. இந்த முறை அனைத்து அணிகளும் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்றுகள் நடத்தப்படவுள்ளன.
அந்தவகையில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது பயிற்சியை தொடங்கிவிட்டது. சூரத்தில் உள்ள லால்பாய் காண்ட்ராக்டர் மைதானத்தில் நேற்று பயிற்சி முகாம் தொடங்கியது. இதில் கேப்டன் தோனி உள்ளிட்ட அணியின் முக்கிய வீரர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் புதிதாக ஒரு வீரரும் இணைக்கப்பட்டுள்ளார். அயர்லாந்தை சேர்ந்த ஜோஷ் லிட்டில் என்ற 22 வயது வேகப்பந்துவீச்சாளர், இந்த சீசன் முழுவதும் சிஎஸ்கேவுக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக செயல்படவுள்ளார். இதனை அயர்லாந்து கிரிக்கெட் வாரியமும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் சூரத் விரைகிறார்.