
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை மகளிர் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கண்கக்கில் சமன்செய்தது. அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அயர்லாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. இருப்பினும் அயர்லாந்து அணியானது 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் இப்போட்டியில் ஆட்டநாயகி விருதை சமாரி அத்தபத்துவும், தொடர் நாயகி விருதை அர்லீன் கெல்லியும் கைப்பற்றினர்.
இந்நிலையில் சர்வதேச மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி புதுப்பித்துள்ளது. அதன்படி பேட்டர்கள் வரிசையில் இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் இரண்டாம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் இத்தொடரில் சோபிக்க தவறிய இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து ஒரு இடம் பின் தங்கி நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.