
அயர்லாந்து vs இங்கிலாந்து, 2ஆவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லேவன்! (Image Source: Cricketnmore)
IRE vs ENG, 2nd T20I, Cricket Tips: இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. இங்கிலாந்து அணி ஏற்கெனவே வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சி செய்யும். அதேசமயம் அயர்லாந்து அணியும் இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.