Advertisement

IRE vs ZIM: கெவின் ஓ பிரையன் அதிரடியில் அசத்தல் வெற்றியைப் பெற்ற அயர்லாந்து!

ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 29, 2021 • 20:00 PM
Ireland win the second T20I and level the series 1-1
Ireland win the second T20I and level the series 1-1 (Image Source: Google)
Advertisement

அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி டப்லினில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்ம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பினாலும், ஷும்பா - ரியான் பர்ல் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது. 

Trending


இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மில்டன் ஷும்பா 46 ரன்களையும், ரியான் பர்ல் 37 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் கெட்கேட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - கெவின் ஓ பிரையன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் ஸ்டிர்லிங் 37 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த கெவின் ஓ பிரையன் அரைசதம் அடித்து அசத்தினார். 

பின் 60 ரன்களில் கெவின் ஓ பிரையனும் ஆட்டமிழக்க, மறுமுனையில் களமிறங்கிய ஜார்ஜ் டெக்ரெல் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிபெறச் செய்தார். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதன் மூலம் அயர்லாந்து அணி 18.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை அயர்லாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement