
ஜிம்பாப்வே மகளிர் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் அயர்லாந்து அணி வெற்றிபெற்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு ஏமி ஹண்டர் மற்றும் ரபேக்கா ஸ்டோக்கல் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் ஏமி ஹண்டர் அரைசதம் கடந்தும் அசத்தினார்.
அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ஏமி ஹண்டர் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய ரபேக்கா ஸ்டோக்கலும் 45 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் லூயிஸ் லிட்டில் 22 ரன்களையும், லாரா டெலானி 19 ரன்களையும், ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.