-mdl.jpg)
இங்கிலாந்து மகளிர் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்தி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பிரையோனி ஸ்மித் - டாமி பியூமண்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் பிரையோனி ஸ்மித் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சரென் ஸ்மேல் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் அரைசதத்தை நோக்கி விளையாடி வந்த டாமி பியூமண்டும் 40 ரன்களில் நடைடைக் கட்ட, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளில் பைஜ் ஸ்கோல்ஃபீல்ட் 34 ரன்களையும், ஜார்ஜியா ஆடம்ஸ் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்று வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஓர்லா பிரெண்டர்காஸ்ட், அர்லீன் கெல்லி, ஐமி மாகுவேர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.