
டி20 உலக கோப்பை அரை இறுதியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திடம் மிகவும் மோசமாக தோற்றது. அலெக்ஸ் ஹால்ஸ், பட்லர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்ததால் இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த ஏமாற்றம் அடைய வைத்தது. இதற்கிடையே இந்திய அணியின் அரை இறுதி தோல்வியை கிண்டல் செய்யும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அவர் தனது டுவிட்டர் பதிவில், 'எனவே இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டி20 உலக கோப்பை இறுதி போட்டி யில் 152/0 vs 170/0 என பதிவிட்டு இருந்தார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.