
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியையும், இரண்டு தோல்வியையும் பதிவுசெய்துள்ளன. இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் குறித்து விரிவான முன்னோட்டத்தை வழங்கினார். இதற்கிடையில், அவர் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் லெவனையும் தேர்ந்தெடுத்தார்.