உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடும் அணிகள் குறித்து இர்ஃபான் பதான் கணிப்பு!
இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொட்ரில் எந்த நான்கு அணிகள் தான் தகுதி பெறும் என தனது கருத்துக்கணிப்பை தெரிவித்திருக்கிறார்.
இந்தாண்டு ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் உலகம் முழுவதும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கலை கட்ட தொடங்கி இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அனைத்து நாடுகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கும் நிலையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தயாராக இருக்கின்றன.
மேலும் வருகின்ற 29ஆம் தேதி முதல் உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளும் தொடங்கவுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பையில் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் பற்றிய கருத்துக்கணிப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்த வருட உலக கோப்பையின் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என அறிவித்துள்ளனர்.
Trending
ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் உலகக் கோப்பையின் அரை இறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொட்ரில் எந்த நான்கு அணிகள் தான் தகுதி பெறும் என தனது கருத்துக்கணிப்பை தெரிவித்திருக்கிறார்.
My top 4 for this World Cup in india.
— Irfan Pathan (@IrfanPathan) September 25, 2023
1) INDIA
2) SOUTH AFRICA
3) ENGLAND
4) AUSTRALIA
what’s your guys ? #WorldCup2023
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், “இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் இந்த உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக குறிப்பிட்டு உங்களது கருத்து என்ன?” என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்திருந்த வேளையில் இர்ஃபான் பதான் தென் ஆப்பிரிக்க அணியை தேர்வு செய்துள்ளது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now