
'Is John Cena Supporting India In WTC Final?', Fans Confused After WWE Star Posts Virat Kohli's Phot (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உலக பொழுதுபோக்கு மல்யுத்த (WWE) விளையாட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஜான் சீனா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த படத்திற்கு அவர் கேப்ஷன் எதுவும் கொடுக்கவில்லை. இதே போல இந்தியா - நியூசிலாந்து அணிகள் கடந்த 2019இல் உலக கோப்பை அரையிறுதியில் மோதி விளையடிய போது ஜான் சீனா, கோலி படத்தை பகிருந்திருந்தார். இதன் காரணமாக ஜான் சீனா, விராட் கோலியின் தீவிர ரசிகராக இருக்கலாம் என ரசிகர்கள் சிந்தித்து வருகின்றனர்.