
Ish Sodhi Record: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது நியூசிலாந்து வீரர் மற்றும் உலகின் மூன்றா வீரர் எனும் பெருமையை இஷ் சோதி பெற்றுள்ளார்.
முத்தரப்பு டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக டிம் செஃபெர்ட் 75 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 63 ரன்களையும் சேர்த்தனர். ஜிப்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் ந்ங்கரவா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில் டோனி முன்யோங்கா 40 ரன்களையும், தியான் மேயர்ஸ் 20 ரன்களையும், முசேகிவா 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஜிம்பாப்வே அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இஷ் சோதி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.