
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி வாண வேடிக்கை காட்டியது. தொடக்க வீரர் ஷுப்மன் கில் அட்டகாசமான இரட்டை சதம் அடிக்க அவருக்கு மற்ற வீரர்கள் உறுதுணையாக நின்றனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது.
இந்திய அணியின் அதிரடி ஆட்டங்களுக்கு மத்தியில் டாம் லேதம் செய்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 40ஆவது ஓவரின் போது டேரில் மிட்செல் வீசிய பந்தை ஹர்திக் பாண்ட்யா அடிக்க தவறவிட, அதனை விக்கெட் கீப்பர் டாம் லேதம் பிடித்தார். அப்போது பந்து பட்டது ஸ்டம்பில் என அவுட் கேட்கப்பட்டது. இதனை ரிவ்யூவ் செய்து பார்த்த 3ஆவது நடுவரும் தவறான முடிவை வழங்கினார்.
உள்ளே சென்ற பந்து, ஸ்டம்புகளுக்கு மேலே தான் சென்றது. கீப்பர் டாம் லேதமின் கைகளுக்குள் சென்ற பிறகும் கூட ஸ்டம்புகளில் விளக்கு எறியவே இல்லை. ஆனால் லேதம் தான் கிளவுஸை ஸ்டம்புகளுக்கு மிகவும் அருகில் வைத்து தட்டிவிட்டார். இதனால் தான் விளக்கு எறிந்தது தெளிவாக தெரிந்தது. இதே செயலை சுப்மன் கில்லுடனும் முயற்சி செய்தார். ஆனால் அவர் பந்தை அடித்துவிட்டதால், லேதம் கைகளால் ஸ்டம்புகளை தட்டிவிடுவது அம்பலமானது.