பயிற்சியில் அதிரடி காட்டும் இஷான் கிஷன்; வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு இடையே நடைபெற்ற பயிற்சி போட்டியில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது.

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடவுள்ளார். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இஷான் கிஷான் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
Trending
அதன்பின் வீரர்கள் மேகா ஏலத்தில் அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.11.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இஷான் கிஷான் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு முன் இந்தியா அணியின் அங்கமாக இருந்த இஷான் கிஷான், உள்ளூர் போட்டிகளை தவிர்த்து ஐபிஎல் தொடருக்காக தயாரானதன் காரணமாக, அணியின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால் இந்திய அணியில் தான் இழந்த இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தில் இஷான் கிஷான் அடுத்தடுது அரைசதங்களைப் பதிவுசெய்தது மட்டுமில்லாமல், பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
Ishan Kishan smashed 64 in 23 balls in the SRH Intra squad match. pic.twitter.com/31uqq85gGf
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 15, 2025அதிலும் குறிப்பாக அவருடன் இணைந்து விளையாடிய அபிஷேக் சர்மா வழக்கத்திற்கு மாறாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இஷான் கிஷான் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி அசத்தினார். இதன்மூலம் அவர் 23 பந்துகளில் 64 ரன்களைக் குவித்தும் அசத்தினார். இதன்மூலம் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிகமுக்கிய வீரராக இஷான் கிஷன் இருக்க போகிறார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, இஷான் கிஷன், முகமது ஷமி, ஹர்சல் படேல், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, அதர்வா டைடே, அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், வியான் முல்டர்*, கமிந்து மெண்டிஸ், அனிகேத் வர்மா, ஈஷான் மலிங்கா, சச்சின் பேபி.
Win Big, Make Your Cricket Tales Now