இந்த வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - டேவிட் வார்னர்!
நோர்ட்ஜே எங்கள் அணியின் சிறப்பான டெத் பவுலர் இன்று அவரால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை என்றாலும் இஷாந்த் சர்மா அற்புதமாக வீசி எங்களுக்கு வெற்றியை பெற்று தந்தார் என டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44ஆவது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆனால் பேட்டிங் செய்ய களமிறங்கியதுமே டெல்லி அணி மிகப்பெரிய சரிவை சந்தித்தது. குறிப்பாக பவர்பிளே ஓவர்களுக்குள் 23 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி பரிதவித்தது. அந்த நேரத்தில் கைகோர்த்த அக்சர் பட்டேல் மற்றும் அமான் கான் ஆகியோர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு அணியை காப்பாற்றினார். பின்னர் அச்சர் பட்டேல் 27 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததும் அமான்கான் மற்றும் ரிப்பல் பட்டேல் ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணியை டீசன்ட்டான ரன் குவிப்பை நோக்கி அழைத்துச் சென்றனர்.
Trending
இறுதியில் அமான்கான் 51 ரன்கள், ரிப்பல் பட்டேல் 23 ரன்களையும் குவிக்க டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை குவித்தது. பின்னர் 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே குவித்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. சேஸிங்கில் எப்போதுமே மிகச் சிறப்பாக செயல்படும் குஜராத் அணி பெற்ற இந்து தோல்வி அவர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய டேவிட் வார்னர், “இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். எங்களது பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம். முகமது ஷமி அற்புதமாக பந்துவீசி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும் பின் வரிசையில் களமிறங்கிய அமான் கான் மற்றும் ரிப்பல் பட்டேல் ஆகியோர் விளையாடிய விதம் எங்களுக்கு நம்பிக்கையை தந்தது.
அதோடு ஒரு டீசன்டான ஸ்கோரையும் அவர்கள் எங்களுக்காக வழங்கினர். அதன் பின்னர் பந்துவீச்சில் அடுத்தடுத்து நாங்கள் விக்கெட்டுகளை கைப்பற்றவே நல்ல நிலையில் வெற்றியை நோக்கி சென்றோம். எங்களுடைய பேட்டிங் துறையில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நாங்கள் பாசிட்டிவாக விளையாட நினைத்தோம். இந்த போட்டியில் கலீல் அகமது மிகச் சிறப்பாக பந்து வீசினார்.
அதோடு இஷாந்த் சர்மா எப்பொழுதும் இளமையானவர் போன்றே மிக அருமையாக பந்து வீசினார். நோர்ட்ஜே எங்கள் அணியின் சிறப்பான டெத் பவுலர் இன்று அவரால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை என்றாலும் இஷாந்த் சர்மா அற்புதமாக வீசி எங்களுக்கு வெற்றியை பெற்று தந்தார்” என்று பாராட்டி பேசியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now