சர்வதேச டி20 கிரி்க்கெட் போட்டி வரலாற்றில் குறைந்தபட்ச ரன்களுக்கு ஆட்டமிழந்து சாதனையும், குறைந்தபந்தில் சேஸிங் செய்து சாதனையும் இரு அணிகள் படைத்துள்ளன. இந்த இரு சாதனைகளும் சர்வதேச கிரிக்கெட்டில் முக்கிய மைல்கல்லாகும். ஸ்பெயின் மற்றும் ஐசல் ஆப் மேன் ஆகிய இரு நாடுகளின் அணிகளும் மோதிய டி20 கிரிக்கெட் போட்டியில்தான் இந்த சாதனை நடத்தப்பட்டது.
இதில் ஐசல் ஆப் மே அணி என்பது இங்கிலாந்து அயர்லாந்துக்கு இடையே இருக்கும் ஒரு குட்டி தீவாகும். ஸ்பெயின் நாட்டுக்கு ஐசல் ஆப் மேன் நாட்டு அணி பயணம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே 6 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதுவரை 4 போட்டிகளில் வென்று ஸ்பெயின் அணி 4-0 என்று இருந்தது.
இந்நிலையில் கார்டாஜெனா நகரில் நேற்று ஐசல் ஆப் மேன் அணிக்கும், ஸ்பெயின் அணிக்கும் 5ஆவது டி20 ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற ஸ்பெயின் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஐசஎல் ஆப் மேன் அணி 8.4 ஓவர்களில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் ஸ்பெயின் வேகப்பந்துவீச்சாளர் கம்ரான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் கம்ரான் தான் வீசிய 3வது ஓவரில், ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார். ஐசஎல் ஆப் மேன் அணி பேட்ஸ்மேன்கள் லூக் வார்ட், கார்ல் ஹார்ட்மேன், எட்வார்ட் பியர் ஆகியோ ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார்.