
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நாளையுடன் முடிவடைகிறது. பரபரப்பாக சென்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும், யுபி வாரியர்ஸ் மகளிர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நாட் ஸ்கைவரின் அதிரடியான அரைசடஹ்த்தின் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 3ஆம் வரிசையில் இறங்கிய கிரன் நவ்கிரே மட்டுமே நன்றாக ஆடி 27 பந்தில் 43 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொதப்ப, அந்த அணி வெறும் ரன்கள் மட்டுமே அடித்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஒரு கட்டத்தில் 12 ஓவர்கள் முடிவில் யுபி வாரியர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது இஸி வாங் பந்து வீச வந்தார். அவரது முதல் பந்திலேயே நவ்கிரே கேட்சானார். அடுத்த பந்தில் சிம்ரன் ஷேக் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து வந்த சோஃபி எக்லிஸ்டோன் 3ஆவது பந்தில் கிளீன் போல்டானார். இதன் மூலம் இசி வாங் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து புதிய வரலாற்று சாதனை படைத்தார்.