Advertisement
Advertisement
Advertisement

இந்திய வீரர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - டிம் சௌதீ!

நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட விதம் மற்றும் அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது என நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 22, 2022 • 21:45 PM
It could have gone either way, says Southee on rain-forced tied 3rd T20I in Napier
It could have gone either way, says Southee on rain-forced tied 3rd T20I in Napier (Image Source: Google)
Advertisement

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டி20 தொடரை தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே 59 ரன்களும், கிளன் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Trending


இதன்பின் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், போட்டியும் பாதியில் முடித்து கொள்ளப்பட்டது. டக்வொர்த் லூவிஸ் முறைப்படி இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் போட்டி டிரா முடிந்தது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் போட்டி முடிவுக்கு பின் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சௌதீ, இந்திய அணியின் டாப் விக்கெட்டுகளை எங்களால் பெற முடிந்தால், எதுவும் நடக்கலாம் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மழை வந்து ஆட்டத்தை கெடுத்தது என்று தெரிவித்தார்.

இப்போட்டி குறித்து பேசிய டிம் சௌதீ, “பேட்டிங்கிலும் ஏமாற்றம்தான். அதன்பின் நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்து ஆரம்ப விக்கெட்டுகளை எடுப்பது பற்றி பேசினோம். அந்த விக்கெட்டுகளை எங்களால் பெற முடிந்தால், எதுவும் நடக்கலாம் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மழை வந்து ஆட்டத்தை கெடுத்தது.

இரு தரப்பும் பேட் செய்யும் வரை உங்களுக்குத் தெரியாது, இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாக இருந்திருக்கும், ஆனால் இப்போட்டி நடைபெறவில்லை. இப்போட்டியில் மழை வராமல் இருந்ததிருந்தால் போட்டியின் முடிவு எந்த வழியிலும் சென்றிருக்கலாம். நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட விதம் மற்றும் அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement