அந்த ஒரு தருணம் எனக்கு இன்றுவரை மனது வலிக்கிறது - விராட் கோலி!
ஐபிஎல் 2016 இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வி இன்றுவரை தனக்கு மனது வலிப்பதாக முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 15ஆவது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்குகிறது. ஐபிஎல் 14 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் 5 முறை, சிஎஸ்கே 4 முறை என கோப்பைகளை வாரிக்குவித்துள்ள நிலையில், விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் என மிகப்பெரும் ஜாம்பவான்களை பெற்றிருந்தும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பரிதாபத்திற்குரிய அணி ஆர்சிபி.
2013ஆம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி, 9 சீசன்கள் அந்த அணியை வழிநடத்தினார். ஆனால் இந்த 9 சீசன்களில் ஒருமுறை கூட அவரால் அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.
Trending
அதிலும் 2016ஆம் ஆண்டு ஐபிஎல்லில் ஃபைனல் வரை சென்ற ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸிடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அந்த சீசனில் விராட் கோலி உச்சகட்ட ஃபார்மில் இருந்தார். அந்த சீசனில் அவர் அடித்த 973 ரன்கள் தான், ஒரு ஐபிஎல் சீசனில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள்.
அந்த சீசனில் ஃபைனல் வரை ஆர்சிபி அணி சென்ற நிலையில் அனைவரும் ஆர்சிபி தான் கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்தனர். ஆனால் ஃபைனலில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது ஆர்சிபி. அதன்பின்னர் அந்தமாதிரியான ஒரு சிறந்த ஆட்டத்தை ஆர்சிபி அணி ஆடவேயில்லை.
இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்து மட்டுமல்லாது, ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிய விராட் கோலி, இப்போது அந்த ஒரு தோல்வியை நினைத்து மனம் வருந்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய விராட்கோலி, “2016 ஐபிஎல் ஃபைனலில் அடைந்த தோல்வி இன்றுவரை வலிக்கிறது. அந்த சீசனில் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பிருந்தும், ஃபைனலில் 110 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி ஆடியபோதும், கடைசியில் போட்டியில் தோற்றோம்.
அந்த போட்டியில் நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அது விளையாட்டுதான் என்றாலும், இன்றுவரை அந்த தோல்வி வலிக்கிறது.
அந்த போட்டி எப்போது டிவியில் போட்டாலும்,ஸ்க்ரீன்ஷாட்டை அனுப்பி மனம் வலிக்கிறது என்று கேஎல் ராகுல் மெசேஜ் செய்வார். அந்தளவிற்கு வலியை கொடுத்த தோல்வி அது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now