இத்தனை ஆண்டு காலம் விளையாட முடிவதை நினைத்து சந்தோஷப்படுகிறேன் - எம் எஸ் தோனி!
சென்னை மக்கள் எப்போதுமே பிரமாதமானவர்கள். அவர்கள் முன் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப் பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் கேப்டனாக விளையாடுவதன் மூலம் சிஎஸ்கே அணிக்காக 200ஆவது முறை தலைமை தாங்கிய கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி 200 வது முறை கேப்டனாக சிஎஸ்கே அணிக்கு விளையாடுகிறீர்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த தோனி, “சென்னை மக்கள் எப்போதுமே பிரமாதமானவர்கள். அவர்கள் முன் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பழைய மைதானத்தில் விளையாடி இருக்கிறேன். அப்பொழுது மிகவும் வெப்பமாக இருக்கும். ஆனால் தற்போது புது மைதானத்தில் விளையாடும்போது சுவிட்சர்லாந்தில் இருப்பது போல் உணர்கிறோம்.
Trending
அப்போதிலிருந்து டி20 கிரிக்கெட் தற்போது மாறி வருகிறது. இத்தனை ஆண்டு காலம் விளையாட முடிவதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். நடப்பு தொடரிலும் சிஎஸ்கே அணி இரண்டு வெற்றிகளை பெற்று இருக்கிறது. இருப்பினும், சில இடத்தில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியது இருக்கிறது. எங்களது வீரர்களும் சிலர் காயம் அடைந்திருக்கிறார்கள்.
இன்றைய ஆட்டத்தில் மிட்செல் சாண்ட்னர், பிரிட்டோரியஸ் பிளேயிங் லெவனில் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக தீக்சனா மற்றும் மோயின் அலி விளையாடுகிறார். சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கிறது. இதன் காரணமாக இரண்டாவது பந்து வீசுவது கடினமாக இருக்கும். இதனால் நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளோம். பனிப்பொழிவு இருக்கும்போது இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமான சூழலாக இருக்கும்” என்று கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now